{Medical Tips} எந்தெந்த உணவுகளில் அத்தகைய வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளடங்கி இருக்கின்றன? அவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? Health Notes - vitamin foods


உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வைட்டமின்களும், தாதுக்களும் அவசியமான ஊட்டச்சத்துகளாக விளங்குகின்றன. எந்தெந்த உணவுகளில் அத்தகைய வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளடங்கி இருக்கின்றன? அவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

1. வைட்டமின் ஏ: Vitamin A
நன்மைகள்: பொதுவான உடல் வளர்ச்சி மற்றும் கண்கள் ஆரோக்கியத்திற்கு இது முக்கிய பங்கு வகிக்கிறது. பற்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கிறது.

சாப்பிடவேண்டியவை: கேரட், ஆரஞ்சு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, முலாம்பழம். இவை அனைத்திலும் கரோட்டின் நிறமி அதிகளவில் இருக்கிறது.

2. வைட்டமின் பி: Vitamin B
நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான சக்தியையும் வழங்குகிறது.

கிடைக்கும் பொருட்கள்: பதப் படுத்தப்படாத உணவுகள், குறிப்பாக முழு தானியங்கள், உருளைக்கிழங்கு, வாழைப்பழங்கள், பீன்ஸ், மிளகுத்தூள், பயறு வகைகள், வெல்லப்பாகு.

3. வைட்டமின் சி: Vitamin C
நன்மைகள்: ரத்தக்குழாய்களை வலுப்படுத்தும். சருமத்திற்கு நெகிழ்வுத்தன்மையும் கொடுக்கும்.

சாப்பிட வேண்டியவை: ஆரஞ்சு, கொய்யா, சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கிவி பழம், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, பரங்கிக்காய்.

4. வைட்டமின் டி: Vitamin D
நன்மைகள்: எலும்புகளை வலுப்படுத்தும் தன்மை கொண்டது. ஆரோக்கியமான எலும்புகளின் வளர்ச்சிக்கும் துணைபுரியும்.

சாப்பிட வேண்டியவை: காலையில் சில நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றாலே உடலுக்கு தேவையான வைட்டமின் டி உற்பத்தியாக தொடங்கிவிடும். முட்டை, மீன், காளான்களை சாப்பிடுவதன் மூலமும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெறலாம்.

5. வைட்டமின் ஈ: Vitamin E
நன்மைகள்: ரத்த சுழற்சியை சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாக்கும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது. பிறவகை கொட்டகைகள், சூரியகாந்தி விதைகள், தக்காளி போன்றவற்றிலும் அதிகம் உள்ளது.


6. வைட்டமின் கே: Vitamin K
நன்மைகள்: ரத்தக்குழாய்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது.

சாப்பிடவேண்டிய பொருட்கள்:பச்சைக்காய்கறிகள், கீரை வகைகள், ப்ராக்கோலி.

7. போலிக் அமிலம்: Folic Acid
நன்மைகள்: புதிய செல்கள் உருவாக்கத்திற்கு உதவுகிறது. பெண்களுக்கு பிரசவகால சிக்கலையும் தடுக்கும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: பச்சைக்காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், பீன்ஸ், பட்டாணி, பயறு வகைகள், ப்ராக்கோலி, காலிபிளவர், பீட்ரூட், சோளம்.

8. கால்சியம்: Calcium
நன்மைகள்: பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு துணைபுரியும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: பால் பொருட்களான தயிர், பாலாடைக்கட்டி, பால், சோயா தயிர், கருப்பட்டி.

9. இரும்புச்சத்து: Iron Energy
நன்மைகள்: உடல் தசைகளை வலுப்படுத்தும். ரத்த அளவை சீராக்கும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: சோயாபீன்ஸ், தானியங்கள், பூசணி விதை, பீன்ஸ், பருப்புவகைகள், கீரை வகைகள்.

10. துத்தநாகம்:
நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். கருவுறுதல் மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: கடல் உணவுகள் துத்தநாகம் நிறைந்தவை. கீரை வகைகள், முந்திரி பருப்பு, பீன்ஸ், கருப்பு சாக்லேட்டுகள் போன்றவற்றிலும் நிறைந்திருக்கிறது.

11. குரோமியம்: Chromium
நன்மைகள்: உடலுக்கு தேவையான குளுக்கோஸை வழங்கும். மேலும் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான சக்தியை அளிக்கும்.

சாப்பிடவேண்டிய பொருட்கள்: முழு தானியங்கள், பச்சைக்காய்கறிகள், கீரைகள்.

Share:

ஐடிஐ சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தம் செய்யலாம்-வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவிப்பு


ஐடிஐ சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தம் செய்யலாம்-வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவிப்பு

ஐடிஐ சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தம் செய்யலாம்
வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவிப்பு
2014 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஐடிஐ படித்தவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழில் தவறு இருந்தால் அதில் திருத்தம் செய்து கொள்ள அணுகலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின்கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) கடந்த 2014 ஆகஸ்ட் முதல் 2017 ஆகஸ்ட் வரை சேர்ந்து ஐடிஐ படித்தவர்களுக்கு சேர்க்கையின்போது வழங்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் மத்திய அரசால் தேர்வு நுழைவுச்சீட்டு, மதிப்பெண் சான்றிதழ், தேசிய தொழிற்சான்றிதழ் (என்டிசி) ஆகியவை ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன.
பயிற்சியாளர்களின் பெயர், தந்தை பெயர், தாய் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை பிழைகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் அப்பிழைகளை சரிசெய்ய இயலாத நிலை முன்பு இருந்து வந்தது.தற்போது, அந்த பிழைகளைச் சரிசெய்ய மத்திய அரசு வாய்ப்பு அளித்துள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயிற்சியாளர்கள் பயன்படுத்தி தங்கள் அசல் சான்றிதழ்களுடன் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள அலுவலகத்துக்கு பிப்ரவரி 22-ம் தேதிக்குள் நேரில் சென்று தங்களுடைய பள்ளி கல்விச் சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களைக் காண்பித்து திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

1. மண்டல பயிற்சி இணை இயக்குநர், அரசு ஐடிஐ மாணவர் விடுதி, அழகர்கோயில் மெயின் ரோடு, மதுரை - 7.
2. மண்டல பயிற்சி இணை இயக்குநர், என்ஜிஓ 'பி' காலனி, பெருமாள்புரம், திருநெல்வேலி - 627 007.
3. மண்டல பயிற்சி இணை இயக்குநர், அரசு ஐடிஐ பின்புறம், ஜி.என்.மில்ஸ் அஞ்சல், கோவை - 641 029.
4. மண்டல பயிற்சி இணை இயக்குநர், அரசு ஐடிஐ அடுக்குமாடி கட்டிடம் (முதல் மாடி), காஜாமலை, திருச்சி - 620 020.
5. மண்டல பயிற்சி இணை இயக்குநர், அரசு ஐடிஐ பின் புறம், கிண்டி, சென்னை - 600 032.

Share:

Join with us

Entertainment

Blog Archive

See your own Language

Search This Blog

Contact Form

Name

Email *

Message *

பார்வையிட்டவர்கள்